கல்வி படுகொலைகள்!!! (சிறுகதை)

கல்வி படுகொலைகள்!!! (சிறுகதை)

-முகம்மது உஸ்மான்

 

`____________` ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன்.மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை கொண்ட பள்ளியில் அவன் பயின்றான்.இவன் படிப்பது 9 வகுப்பாக இருந்தாலும், வகுப்பறை பாடமோ 10 வகுப்பு பாடம்தான். தினம் எதாவது தேர்வு வைத்து கொண்டோய் இருப்பார்கள்.நல்ல மதிப்பெண் பெறவில்லை என்றால் அவமானமும் தண்டனையும் தான் கிடைக்கும்.இதனால் தினமும் இரவு கடுமையாக படிப்பான்.உடலை பற்றிய கவலை யாருக்கும் இல்லை. பள்ளியில் மட்டும் காலை 6.30 ஆரம்பிக்கும் படிப்பு மலை 6.00 மணி வரை(வீட்டில் படிப்பது தனி கதை). அவனுக்கு விளையாட்டு, பொழுதுபோக்கு எல்லாம் கானல்நீர் தான். ஒரே ஆறுதல் கணிணி வகுப்புதான். ஏனேன்றால், அங்குதான் சிறிதுநேரம் புத்தகத்தை மறந்து கணிணியை பார்க்கலாம்.வாரவிடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் கருப்பு தினங்கள் அவனுக்கு.ஏன் என்றால் மற்ற நாட்களில் கிடைக்கும் சிறிது ஓய்வுகூட கிடைக்காது.

நாட்கள் உருண்டோடின, அந்த வருடத்தின் பத்தாம் வகுப்பு பொதுதேர்வு முடிவு அன்று வெளியாகியது.

அன்று சிறப்பு வகுப்புகள் கிடையாது.அப்பா தெலைகாட்சியில் செய்திகளை பார்த்து கொண்டு இருந்தார்.அதில் அதிக மதிப்பெண் பெற்றவர்களின் நேர்காணல்களும், செய்திகளும் வந்த வண்ணம் இருந்தன.அவனது பள்ளியை சார்ந்த மாணவி மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றிருந்தார்.

அப்பா அம்மாவிடம்,“பார்த்தாயா,நம்ம பையன் படிக்கிற ஸ்கூலை சார்ந்த இந்த பொண்ணு ஸ்டேட் செகண்டாம்”.அம்மா முகத்தில் மகிழ்ச்சி.இவன் மெதுவாக வெளியே செல்ல எத்தனித்தான்.

ஆனால்,அதற்குள் அவனது அப்பா அவனிடம்,“டேய், பார்த்தாயா,உனது ஸ்கூல் ஸ்டேட் செகண்டாம்.அப்ப்பா…498 மார்க்.மூணு பாடத்தில், சென்டம்,அய்யோ பாவம் தமிழிழையும், இங்கிலீஷ்லையும் மட்டும் மிஸ்ஆகிடுசு.நீனும் இதை போல நல்லா படித்து ,நல்லா மார்க் எடுக்கணும்.உன்னோட பேட்டியும், டிவியில் வரவேண்டும்”.

அந்த மாணவி தான் எவ்வாறு படித்தோன், என்பதை சொல்லிகொண்டு இருந்தாள்.அம்மா அவனிடம்“அந்த,அக்கா என்ன சொல்றானு,பாருட. நல்லா படிக்கணும்.படிப்புல மட்டும்தான் சிந்தனை இருக்கனும் சரியா? ,“சரிமா” என கூறி வெளியே சென்றான்.

நாட்கள் நகர ஆரம்பித்தன.தினம், தேர்வுகளையும், பயிற்சிகளில் முட்டி மோதி நாட்கள் கழிந்தன. பயிற்சி தேர்வுகளில் முறையே 485,493,490 என்று நல்ல மதிப்பெண் பெற்றான்.பொது தேர்வும் முடிந்தது. 490 மதிப்பெண் மேல் பெறுவோன் என நம்பிக்கையுடன் இருந்தான்.விடுமுறை தினம் தினம் பயத்துடன் கழிந்தது.

இன்று பத்தாம் வகுப்பு பொதுதேர்வு முடிவு.

ஆம், அவன், தனது பெற்றோறின் ஆசையை நிறைவேற்றினான்.

செய்திகளில் அவனது புகைப்படம் பளிச்சிட்டன.

செய்தியில்,

`465 மதிப்பெண் பெற்ற மாணவன் தற்கொலை.தான் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைகாததால் தவறான முடிவை எடுத்தார்…’

செய்தி வெளியிட்டவர்கள் தவறாக குறிப்பிட்டு விட்டார்கள், தற்கொலை என்று,….இது தற்கொலை அன்று. சமுதாய படுகொலை. ஆம்,இதற்கு மொத்த சமுதாயமே காரணம்.

குறிப்பு:

ஏன், தொடக்கத்தில் பெயருக்கு பதில் ‘______’ போடப்பட்டுள்ளது என, நீங்கள் நினைக்கலாம். பெயரை குறிப்பிட ஒன்றா,இரண்டா நூற்றுகணக்கான உயிர் மாய்க்காப்படுகிறது.ஏதோ படிப்பு மட்டும் தான் வாழ்க்கை என்று. அவர்களுள் இவனும் ஒருவன்.

சமுதாம் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறது?

                                                                                       MOHAMED USMAN

WWW.MDUS.WEBS.COM

One response to “கல்வி படுகொலைகள்!!! (சிறுகதை)

  1. Pingback: Turn your windows 7/vista to windows 8 with free of cost | neotech4u·

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s