இணையத்தில் இலவசமாக கற்கலாம் வாங்க!

Read it in English: AN INTRODUCTION TO FREE ONLINE COURSES

Picture

இணைய வழி கல்வி(E-Learing) என்பது அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அதன் ஒரு பகுதியாக இணையத்தின் வாயிலாக இலவசமாக கல்வி கற்பதை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.

இணைய வழி கல்வி என்றவுடன் ஏதோ குதிரை கொம்பான விசயம் என்று பின் வாங்காதீர். யூ-டூப் (Youtube ) வழியாக ஒளிபடம் பார்ப்பது போலதான்.படிப்பா… என்று மலைக்கவும் வேண்டாம். இம்முறை கல்வி கற்றல் எளிமையானதும் ஆர்வாமூட்டகூடியதும் ஆகும்.

உலகின் புகழ்மிக்க பல பல்கலைக்கழகங்கள் (Harvard University, Johns Hopkins University, MITUniversity,University of California, Boston University, BRITISH COUNCIL,IIT Bombay…) இந்த சேவையை வழங்குவதால் உயர் தரமான கற்றல் அனுபவத்தை பெற முடியும்.

பல பாடப்பிரிவுகளின் கீழ் தலைப்புகள் உள்ளன. உங்களுக்கு விருப்பமான எந்த படிப்பையும் தேர்ந்தெடுக்கலாம். கணிப்பொறியியல், வரலாறு, பொறியியல், மின்னனுவியல், மொழியியல், இன்னும் பல[Computer Science and Technology, Finance and Economics, Science and Medicine, Mathematics, Social Sciences, Classics, and Humanities, Law,].., என்று கல்லூரிகளின் அனைத்து பாடப்பிரிவுகளும் உள்ளன. சில இணையதளங்கள் சர்டிபிகேட்டும் கொடுக்கின்றன.

இதில் உள்ள சிறந்த விசயம், யாதெனில் உங்கள் விருப்பமான நேரத்தில் படிக்கலாம், தேர்வு எழுதலாம். சரி, அந்த இணையதளங்களை பற்றி இப்போது பார்போம்.

www.edx.org

இது ஒரு முண்ணனி இணைய தளம். இதில் சர்டிபிகேட் உண்டு. இரண்டு விதமான சர்டிபிகேட்டை இந்த இணைய தளம் கொடுக்கிரது. ஓன்று சுய படிப்பு முறை ( இலவசம்) , எக்ஸ்பிரஸ் (இலவசமல்ல). இரண்டுக்கும் படிப்புமுறை ஒன்று தான் என்றாலும் எக்ஸ்பிரஸ் சர்டிபிகேட் verify  செய்யப்பட்டு தரப்படும்.

www.ted.com

இந்த இணைய தளம் பல தலைப்புகளில் காணோளி தொகுப்புகளை தருகிறது.

www.mysliderule.com

இது ஒரு சிறந்த இணைய வழி கல்விக்கான தேடுபொறி ஆகும்.

www.khanacademy.org

இது இலவச கல்வியுடன்(Math, Science, Economics and finance, Arts and humanities, Computing) போட்டி தேர்வுகளுக்கும் (SAT, GMAT, IIT, JEE, MCAT, CAHSEE, AP,Art History, NCLEX-RN) பயிர்ச்சி அளிக்கப்படுகிறது.

www.coursera.org

academicearth.org

www.futurelearn.com

www.class-central.com

www.oeconsortium.org

www.open.edu/openlearn

Education-Portal.com

CreateLIVE

The University of Reddit

இந்த தளங்களை பற்றி மேலும் அறிய

Source: Lifehacker and more

 

Leave a comment